மின்சாரம் தொடர்பான புகாரா? ஒரே செயலியில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு!
மின் கட்டணம் உட்பட மின்சாரம் தொடர்பான புகார்கள் அனைத்தையும் ஒரே செயலியில் தெரிவிக்கும் வகையில் ‘TANGEDCO’ என்ற மொபைல் செயலியை அப்டேட் செய்துள்ளது தமிழ்நாடு மின்வாரியம்.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவகத்தில் இந்த மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படுகிறது. 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் இந்த செயலியில், 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மின்நுகர்வோர் மின்தடை, கூடுதல் மிண்கட்டணம் வசூல் போன்ற மின்சாரம் தொடர்புடைய பிரச்னைகளை தெரிவிக்கலாம்.
முன்னதாக மின்வாரியம் சார்பில் ‘TANGEDCO’ என்ற மின்கட்டணத்தினை செலுத்தும் செயலி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதே செயலியில் தற்போது மின்சாரம் தொடர்பான புகார்களையும் தெரிவிப்பதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு மின்வாரியம்.
இந்த செயலியை பொறுத்தவரை ஒரு ஷிப்டுக்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என சொல்லப்பட்டுள்ளது. அதனால் தீ விபத்து, மின் திருட்டு, மின் கட்டணம், மின் தடை, பழுதடைந்த மின்கம்பம் போன்ற அனைத்து வகையான மின்சார பிரச்னைகளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.
எப்படி புகார் அளிக்கலாம்?
இந்த TANGEDCO செயலிக்கு சென்று மீட்டர், மின் கட்டண புகார்களுக்கு மின் இணைப்பு எண்ணை பதிவிட்டும், மற்ற சேவைகளுக்கு மின் இணைப்பு எண்ணை பதிவிடாமலும் புகார் அளிக்கலாம்.
இதை பயன்படுத்தும்போது location ஆன் செய்து இருக்க வேண்டும். இதன் மூலம் செயலியை திறந்தவுடன் புகார் அளிப்பவரின் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்திற்கு செயலி வந்து சேர்த்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் விரைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவர் எனக்கூறப்படுகிறது. இச்செயலியில் புகைப்படங்கள் மூலமாகவும் புகார்களை பதிவு செய்து தீர்வு காணலாம்.
TANGEDCO செயலியை இங்கே க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.