மானிய விலையில் டூவீலர்: லைசென்ஸ் பெற பெண்களிடையே ஆர்வம்

மானிய விலையில் டூவீலர்: லைசென்ஸ் பெற பெண்களிடையே ஆர்வம்
மானிய விலையில் டூவீலர்: லைசென்ஸ் பெற பெண்களிடையே ஆர்வம்
Published on

அரசு கொடுக்க இருக்கும் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ஒட்டுனர் உரிமம் பெற பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது 25 ஆயிரம் அரசு வழங்க புதிய திட்டம் அரசு நடைமுறைப்படுத்த இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று இத்திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்படிவம் பூர்த்தி செய்து கொடுக்க பிப்ரவரி 5 ம் தேதி கடைசி நாள். ஏற்கனவே மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் மானியம் பெற ஓட்டுனர் உரிமம் இருப்பது கட்டாயம். இதனால் தமிழகத்தில் பல இடத்தில் பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகுகின்றனர். சென்னையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் பெற பெண்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. காலை 9 மணிக்கே பெண்கள் ஆர்.டி.ஒ அலுவலகதுக்கு வரத் தொடங்குகின்றனர்.

சென்னையில் 14 வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் உரிமம் பெறலாம். இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசியபோது சராசரியாக 500 பேர் வரை ஒரு நாளைக்கு உரிமம் பெற விண்ணப்பம் செய்யும் பெண்கள் தற்போது அது 2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் விடுப்பு எடுத்தும் அனுமதி பெற்றும் ஆர்.டி.ஒ அலுவலகத்துக்கு வருகின்றனர். 

உரிமம் பெற வீட்டு முகவரி, வயது சான்றிதழ் இருந்தால் உரிமம் பெற ஏற்றுக் கொள்ளப்படும். அதேபோல் ஒட்டுனர் பயிற்சி பள்ளி வைத்திருப்பவர்களும் இதற்கான பணி தனியாகவும் செய்து வருகின்றனர்.

 உரிமம் பெற கூடுதலாக பெண்கள் வருவதால் ஒட்டுனர் உரிமம் புதுப்பிப்பது, வாகன எண்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பல பணிகளை விட உரிமம் பெற முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கூடுதலான பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 220 ரூபாய் கட்டினாலே அவர்களுக்கு பழகுனர் உரிமம் LLR என்பதை அதிகாரிகள் வழங்குகின்றனர். பின்னர் ஒரு மாதத்தில் வாகனம் ஒட்டி காண்பித்து ஒட்டுனர் உரிமத்தை பெறலாம். 

பணிக்கு செல்லும் பலர் விடுப்பு பெற்று உரிமம் பெற வரும் நிலையில் காலதாமதம் ஏற்படாமல் உரிய நேரத்தில் கிடைக்க  வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அதேபோல் இடைத் தரகர்கள் தலையீடு இல்லாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com