அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜர்

அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சென்னை எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுகோப்பு புகைப்படம்
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்தனர். அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார்” எனக் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

EPS
EPSptweb

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அப்போது அவர், “நீதிமன்ற சம்மனை நான் பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. உண்மையில் எனக்கு நீதிமன்ற சம்மன் ஏதும் வரவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும்” என நீதிபதியிடம் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு
இந்தியாவின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால்.. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி

இதை கேட்ட பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “சென்னையில் இருந்த போதும் சரி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் இருந்த போதும் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com