தண்ணீரை, நீர்ம தங்கமாக பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மேலாண் இயக்குனர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்யகுமார், “100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை 2017ல் தமிழ்நாடு சந்தித்து. சென்னையில் இந்தாண்டும் கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சென்னைக்கு நீர் வழங்கும் 4 நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டன. ஆகவே, நீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியம். மக்கள் நீரை தங்கமாக கருத வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக மேம்பாட்டு நிதியை நீர் ஆதாரங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். நீர் ஆதாரங்களை மேம்படுத்த தமிழக அரசு 1200 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சவாலான ஒன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.