அமைச்சர் செல்லூர் ராஜூம் ட்விட்டருக்கு வந்தாச்சு!

அமைச்சர் செல்லூர் ராஜூம் ட்விட்டருக்கு வந்தாச்சு!
அமைச்சர் செல்லூர் ராஜூம் ட்விட்டருக்கு வந்தாச்சு!
Published on

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் கணக்குகளை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ட்விட்டரில் பெரும்பாலானோர் கணக்கு வைத்துள்ளனர். ஏனெனில் தாங்கள் வெளிநாடுகளிலோ அல்லது பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத தருணங்களிலோ தாங்களின் கருத்துக்களை ட்விட்டரில் கூறிவிடுவதற்காகதான். அதன்மூலம் அந்தக் கருத்து ஊடங்களுக்கு சென்றுவிடும். தமிழகத்தில் ட்விட்டர் மூலம் ஆரம்பத்தில் அரசியல் செய்தவர் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பாக ட்விட்டர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் மட்டுமின்றி ரஜினிகாந்தும், ட்விட்டரில் தான் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இவர்கள் தவிர தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் ட்விட்டரில் செயல்பாட்டில் உள்ளனர். அத்துடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். அவரை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், செல்லூர் ராஜூவின் ட்வீட்டுக்கு லைக் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com