அதிகரித்து வரும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில் கூட்டுறவு பண்டக சாலையிலுள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை பொறுமையாக அவர் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அமைச்சர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே பசுமைப் பண்ணை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாகவும், விலையைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.