கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
கீழடியில் 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அகழாய்வில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள் உள்ளிட்ட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. வரும் 30-ம் தேதியுடன் மூன்றாம் கட்டப் ஆய்வு பணிகள் நிறைவடைகிறது. நான்காம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை மூலமாக வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து இந்தியத் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தமிழர் தொன்மையை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறினார்.