தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிப்பு
Published on

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இரண்டாவது முறையாக நடைபெற்ற கூட்டத்திலும், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்பி வைத்தியலிங்கம், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்தது. ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டதில், ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 7 ஆம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் ஒருமித்த கருத்து எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரின்ஸ், விஜயதாரணி, முனிரத்னம், செல்வப்பெருந்தகை ஆகியோரிடம் கடும் போட்டி நிலவி வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் வெளியிடும் என்று மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com