பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் இன்று மாலை அவரது செந்த ஊரான கார்குடிக்கு கொண்டுவரப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைவருமே உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.
இதற்கிடையே உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆவார், இவர் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை ஊள்ளது. இவர் விமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய போது தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிவச்சந்திரன் சொந்த ஊரான கார்குடி கிராமத்திற்கு இன்று மாலை அவரது உடல் கொண்டுவரப்படயுள்ளது. சிவச்சந்திரனின் மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது சொந்த ஊரான கார்குடி கிராம மக்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “பயங்கர தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளாதகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.