பிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா? 

பிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா? 
பிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா? 
Published on

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கி உள்ளதாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தையும் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஐடி நிறுவனங்களில் கொடுக்கப்படும் சம்பளத்தையும் தினகரன் என்ற ஒருவர் எடுத்து வைத்து ஒரு ஆய்வை செய்துள்ளார். அதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் பெங்களூரிலுள்ள நிறுவனங்களைவிட 40 சதவிகிதம் குறைவான சம்பளம் தருவது தெரியவந்துள்ளது. 

ஏனென்றால் சென்னையில் ஐடி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் ரூ.20 லட்சம் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல இந்த உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் யாரும் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கவில்லை. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் ஐடி நிறுவனங்களுக்கு இடம் வாடகைக்கு கொடுப்பது மிகவும் குறைந்துள்ளது. 

அதேபோல தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சிக்கு முன்னுரிமை தராமல் சமூக நல திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே தான் தமிழ்நாட்டில் ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி பார்க் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி மிகவும் பின் தங்கி உள்ளது. உதாரணமாக சென்னையில் டைடல் பார்க், ஒரகடம், டிஎல்.எஃப், ஒ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் மெதுவாக வளர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தொழில் சார்ந்த முதலீடுகள் குறைந்து வருவதால் வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. ஆகவே தமிழ்நாட்டு மக்கள் வேலைவாய்ப்புகளுக்கு வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை விரைவில் உருவாகும். 

தமிழ்நாட்டிற்கு போட்டியாக ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் ஆந்திர அரசின் தொழில் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளே ஆகும். (அதாவது ஹைதராபாத் அப்போது ஆந்திராவுடன் இருந்தது. அப்போதையை முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இவரது ஆட்சி காலத்தில்தான் ஐடி நிறுவனங்களின்  புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டன) எனவே இனியாவது தமிழ்நாடு அரசு தொழில்வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தி தற்போது கட்டப்பட்டு வரும் புதிய ஐடி பார்க்குகளை விரைந்து கட்டி முடிக்கும் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com