50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு

50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு
50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு
Published on

திங்கட் கிழமை முதல் 50% அலுவலர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்தும் பொது முடக்கம் இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன், மே 17ஆம் தேதிக்கு முன்பு பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் திங்கட் கிழமை முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், மாவட்ட அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்குப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குரூப் ஏ’ அதிகாரிகள் அனைத்து நாட்களும் அலுவலகத்திற்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பணியில் இல்லாத ஊழியர்கள் தேவைப்படும்போது பணிக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com