சென்னை | Pink ஆட்டோக்கள்: ‘பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்..’ - தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

சென்னையில், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை ஓட்டுவதற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
சென்னை
சென்னைமுகநூல்
Published on

சென்னையில், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை ஓட்டுவதற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகரில் 250 ஆட்டோக்களை இயக்க உள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு, அவசரத்துக்கு உதவும் வகையில், காவல் துறை உதவி எண்களுடன் இவற்றில் ஜி.பி.எஸ். இணைக்கப்பட்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு லட்சம் ரூபாய் மானியத்தில் ஆட்டோ வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகைக்கு வங்கி மூலம் உதவப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் சேர, சென்னையில் குடியிருக்கும் 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை
திருப்பத்தூர் | அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை! உதவிகோரி தாய் கண்ணீர்!

நவம்பர் 23ஆம் தேதிக்கு முன்பாக

சமூக நல அலுவலர்,

8ஆவது தளம்,

சிங்காரவேலர் மாளிகை,

சென்னை -  600 001

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com