நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு தமிழக அரசின் நிர்ணயத்துள்ள 70 ரூபாயுடன் சேர்த்து 1660 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுரகத்திற்கு கூடுதலாக தமிழக அரசின் ரூ.50 சேர்த்து ரூ.1,600 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி-சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் தேவையான இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கவும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 1,564 கொள்முதல் நிலையங்களை திறந்து 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.