விழுப்புரம் மாவட்டம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலை உணவுத் திட்டம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 63,168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
முதல்வரின் முகவரி திட்டம் மூலம், 1,24,356 மனுக்களில், விக்கிரவாண்டியில் மட்டும் 21,093 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெற்ற 3,49,257 குடும்பத் தலைவிகளில், விக்கிரவாண்டியை சேர்ந்த 53,000 பேர் உள்ளனர்.
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 9,488 மாணவிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 738 மாணவிகளும் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுவருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.