மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு

மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு
மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு
Published on

மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைக்காக சுமார் 88 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டில் மீன்பிடித் தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக 88 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 148 ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மீனவருக்கும் தலா 5 ஆயிரம் வீதம், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 716 பேருக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018-19ஆம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 495 மீனவர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com