தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா இரவு 7.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியைமக்க உரிமை கோரினார்.
இந்நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சகத்திற்கு இந்த அறிக்கையை அவர் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் சந்திப்பிற்கு பின் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் ஆளுநர் பேச உள்ளார். சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கைகளை அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆளுநரிடம் இருந்து மற்றொரு விரிவான அறிக்கை மத்திய அரசால் பெறப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.