தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிக் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ராஜ்பவன் தர்பார் ஹாலில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பேராசிரியை விவகாரம் குறித்து ஆளுநர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஆளுநர் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. சட்டப்படி ஆளுநர்கள் செய்தியாளர்களை சந்திக்க தடையில்லை. இருப்பினும், செய்திகளை வெளியிடுவதன் (பிரஸ் ரிலீஸ்) மூலமாக தனது கருத்துக்களை தெரிவிப்பார்கள். முக்கியமான விவகாரங்களில் மட்டுமே அரிதாக அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.