4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியாக அங்கீகரிக்க உள்ள வரம்புகள் குறைப்பு உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல்
ஆளுநர் ஒப்புதல்முகநூல்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை அண்மையில் கூடிய போது நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவான 'நகர்ப்புற உள்ளாட்சி திருத்த மசோதா'வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், மாநகராட்சியாக உயர்த்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகள் குறைக்கப்படுகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்கோப்பு படம்

அதேபோல், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துகள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வது குறித்து சட்டத்திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்.. சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன்.. ஆனாலும்!

இத்துடன் சென்னையில், கழிவுநீர் வெளியேற்றும் இணைப்பை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் செய்யப்பட்ட திருத்தம், சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய மாநகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com