(மாதிரிப்படம்)
தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி கடந்தாண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டுவர இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது. இந்நிலையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் முயற்சி நல்ல பலனளித்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பணி நிரவலின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாண்டிசோரி முறையில் கற்பிக்கப்படும் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.