"மணிப்பூர் சம்பவத்தைபோல வேடிக்கை பார்க்கக்கூடிய அரசு தமிழ்நாட்டில் இல்லை" - சபாநாயகர் அப்பாவு

'மணிப்பூர் சம்பவத்தைபோல வேடிக்கை பார்க்கக்கூடிய அரசு தமிழ்நாட்டில் இல்லை' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுகோப்பு புகைப்படம்
Published on

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகக்கூட கட்டடம் திடிரென தீப்பிடித்து எரிந்தது. வள்ளியூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஆய்வகப் பொருட்கள், மேசைகள், புத்தகங்கள் தீக்கிரையாகின. மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு யாரும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனரா என வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இந்த ஆய்வக கட்டடத்தில் உள்ள அறிவியல் ஆய்வகப் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து முழுமையாக சேதமடைந்து விட்டது. இந்த அறிவியல் ஆய்வக கூடத்திற்கு தளவாட பொருட்கள் வாங்குவதற்கு என்னென்ன தேவையோ அதனை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை கொடுத்து மாணவ மாணவிகள் தொடர்ந்து படிப்பதற்கு வழி ஏற்படுத்தி தரப்படும்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி வெட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பிற மாநிலங்களில் இருப்பதை போன்று வேடிக்கை பார்க்கக்கூடிய அரசு இல்லை. ஒரு பலமான முதல்வர் இருக்கக்கூடிய காரணத்தினால் எந்த தவறு என்றாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். நாங்குநேரி சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் சம்பவத்தைபோல வேடிக்கை பார்க்கக்கூடிய அரசு தமிழ்நாட்டில் இல்லை'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com