மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு
மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு
Published on

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை தள்ளிவைக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தாழ்வழுத்த மின் இணைப்புக்கான மின் நுகர்வு செலுத்தாவிட்டாலும் மே 18 வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என மின் வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட விளக்கத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com