பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பஞ்சுமிட்டாய்
பஞ்சுமிட்டாய்ஃபேஸ்புக்
Published on

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டநிலையில் தமிழ்நாட்டில் அதன் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் ஆபத்தை விளைவிக்கும் Rhodomine B எனும் ரசாயனம் இருப்பது தெரியவந்தநிலையில் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை போன்ற பொது இடங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மெரினா கடற்கரையில் இருந்து கைப்பற்றிய பஞ்சுமிட்டாய்களை ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்ததில் Rhodomine B எனும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது இன்று(17.2.2024) வெளியான ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பஞ்சுமிட்டாய்கள் நஞ்சுமிட்டாய்களாக மாறியிருப்பதால் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்களின் விற்பனைக்கு தடைவிதித்து தமிழக சுகாதரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் , இது குறித்து அவர்தெரிவிக்கையில், ” பஞ்சுமிட்டாயில் செயற்கை நிறமூட்டி ரொட்டாமின் பி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சுமிட்டாய்
மெரினாவில் பஞ்சுமிட்டாய் பறிமுதல்... புற்றுநோய் உண்டாக்கும் நச்சு? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இதன்படி, இனி பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்வது, விற்பனை, இறக்குமதி செய்வது என எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.  அதேபோல் திருமண நிகழ்வு, விழாக்களிலும் இதனை அனுமதிக்கக் கூடாது .இனி எந்த உணவு பொருட்களிலும் செயற்கை நிறமூட்டி பயன்படுத்தக் கூடாது . மேலும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிகளை மீறினால் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com