ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை

1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பள்ளி
பள்ளிமுகநூல்
Published on

கோடை விடுமுறை முடிவுக்கு வரும் சூழலில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ - மாணவிகளுக்கு வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், பள்ளி திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு
பள்ளி திறப்புகோப்புப் படம்

இது குறித்த அறிவிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது” என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி
மேட்டுப்பாளையம்: மண் சரிவால் தடைபட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்...

வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இவ்வறிப்பினை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com