அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிப்பு; டாப் கியரில் காங்கிரஸ்; யார் யார் எந்த எந்த தொகுதியில்?

மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்
சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்pt web
Published on

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளன. அரசியல் தலைவர்களின் வார்த்தைப் போர்கள் தேர்தல் களத்தில் உச்சத்தை எட்டிவருகின்றன.

திமுக- காங்கிரஸ்
திமுக- காங்கிரஸ்புதிய தலைமுறை

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும், புதுச்சேரி தொகுதி உட்பட மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்தமுறை ஒதுக்கிய திருச்சி, ஆரணி, தேனிக்குப் பதிலாக, இந்தமுறை கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சியான திமுக, வேட்பாளர்களை அறிவித்து ‘ஜெட்’ வேகத்தில் பயணிக்க, காங்கிரஸ் தனது ரேஸை தொடங்காமலே இருந்தது.

வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்த நிலையில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 23) தமிழ்நாட்டில் போட்டியிடும் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்
“வரலாறு தெரியுமா? பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர்” - பினராயி விஜயன்

4 சிட்டிங் எம்.பிக்களுக்கு வாய்ப்பு

சனிக்கிழமை வெளியாகி இருந்த பட்டியலின்படி, புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் களம் காண்பார் என அறிவிக்கப்பட்டது. சிட்டிங் எம்.பிக்களான செல்லக்குமார் மற்றும் ஜெயக்குமாருக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்தவகையில் கிருஷ்ணகிரி தொகுதியில் ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல, திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு கடந்தமுறை ஆரணி தொகுதியில் போட்டியிட்டு எம்.பியான விஷ்ணு பிரசாத்துக்கு இந்தமுறை கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

தவிர, சிட்டிங் எம்.பிக்களான கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகிய நால்வரும் அவர்கள் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்
டிடிவி வசம் செல்கிறதா? டஃப் கொடுக்கும் தங்கத்தமிழ்செல்வன்.. ‘இலை’ நிலை என்ன? - கொதிக்கும் தேனி களம்

விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர் அறிவிப்பு

திருநெல்வேலிக்கான வேட்பாளராக ராபர்ட் புரூஸ் மற்றும் விளவங்கோடு சட்டமன்றதொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு, தாரகை கதர்பர்ட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், மயிலாடுதுறைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தாமதம் ஏன்?

வேட்பாளர் அறிவிப்பு குறித்து புதிய தலைமுறையிடம் பேசி இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “வேட்பாளரை அறிவிப்பதற்கான இழுபறியெல்லாம் ஏதும் இல்லை. இது ஒரு தேசியக் கட்சி. காஷ்மீர் முதல் குமரி வரை ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில நிர்வாகிகள் கொடுக்கும் முடிவை வைத்தும் தேசியத் தலைமை ஆய்வு மேற்கொண்டும் வேட்பாளர்களை அறிவிக்கின்றனர்” என தெரித்திருந்தார்.

சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்
“அப்பா என் 11 வயசுலயே இறந்துட்டாரு.. வருத்தமா இருக்கு” - அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் பதில்!

மயிலாடுதுறைக்கான வேட்பாளர் அறிவிப்பு

#Congress | #ElectionWithPT | #puthiyathalaimurai | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT
#Congress | #ElectionWithPT | #puthiyathalaimurai | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT

அனைத்து தொகுதிகளிலும் பரபரப்புரை அனல் பறக்கும் நிலையில், மயிலாடுதுறையில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனது பரப்புரையை தொடங்காமல் இருந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை நேற்று இரவு அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணை தலைவராக இருக்கும் இவர், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் மகளிர் அணித் தலைவியாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

சசிகாந்த் செந்தில், ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்
“இரட்டை இலையை முடக்குங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் புதிய சின்னம் கேட்ட ஓபிஎஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com