ராணிப்பேட்டையில் டாடா நிறுவனம் சார்பாக புதிதாக துவங்க உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டியபின் விழாவில் பேசிய முதல்வர், “இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல, E-Vehicle-களின் தலைநகரமும் தமிழ்நாடுதான். 2030க்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது.
1973-ல் இதே ராணிப்பேட்டையில்தான் முதல் சிப்காட்டை தலைவர் (முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்டு) தொடங்கி வைத்தார். இன்று இதே இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய ஆலையை அமைக்க ராணிப்பேட்டையை தேர்வு செய்த டாடா நிறுவனத்திற்கு நன்றி.
இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். இதன் குழுமத் தலைவர் சந்திரசேகர் நாமக்கல்லை சேர்ந்தவர். இன்று இளைஞர்களின் முன்மாதிரியாக உள்ளார். அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
முதல்வரின் முழுமையான உரையை, இங்கே அறியலாம்: