மக்களைத் தேடி மருத்துவம் - புதிய திட்டம் இன்று தொடக்கம்

மக்களைத் தேடி மருத்துவம் - புதிய திட்டம் இன்று தொடக்கம்
மக்களைத் தேடி மருத்துவம் - புதிய திட்டம் இன்று தொடக்கம்
Published on

'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் இத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைக்கிறார். இதற்கிடையில் இத்திட்டம் தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் இ்து சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்னைகள் உள்ளிட்ட உடல் நல பிரச்னையுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்படும் இந்த திட்டம், படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com