முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 3ஆவது வாரத்தில் கூடுவது வழக்கம். ஆனால், தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு அசாதாரண சூழலால் இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவில்லை. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம், நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளிவரும் முன்பே, பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும், பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.