2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 8 ஆம் தேதி பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. வருமான வரி நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, வரும் 8 ஆம் தேதி நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.