2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்!

2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்!
2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்!
Published on

தமிழகத்தின் 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க 15 அறிவிப்புகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.

  1. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு.
  2. மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.
  3. மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நிதி ரூ.10,000இல் இருந்து 25,000 ஆக உயர்வு.
  4. விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.
  5. கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
  6. ராமநாதபுரம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
  7. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
  8. தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
  9. அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும். 
  10. விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு.
  11. வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்.
  12. மானிய இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
  13. இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  14. இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.
  15. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.66.50 கோடியில் 6 சி.டி ஸ்கேன்கள் மற்றும் 4 எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com