கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உளப்பூர்வமாக இறுதி சடங்கு செய்யும் தமுமுகவினர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உளப்பூர்வமாக இறுதி சடங்கு செய்யும் தமுமுகவினர்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உளப்பூர்வமாக இறுதி சடங்கு செய்யும் தமுமுகவினர்
Published on

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் இறுதி சடங்கை செய்ய உறவுகள் ஒதுங்கினாலும் உளப்பூர்வமாக உதவி செய்யும் தமுமுகவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்லாமியர்கள் மட்டுமில்லாது மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் உட்பட 27 பேரை அவரவர் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்து வரும் தமுமுகவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் ரியாஸ் தலைமையில் அரசு வழி முறைப்படி தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் சமது மற்றும் தமுமுக தலைமை கழக பேச்சாளர் அபுதாகிர் மற்றும் 30 பேர் கொண்ட குழுவினர், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை பெற்று அவரவர் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்து வருகின்றனர்.

இதுவரை 27 நபர்களின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்துள்ள தமுமுக அமைப்பின்; அப்துல் சமது கூறும் போது "அரசு வழங்கும் பாதுகாப்பு கவச உடை பற்றாக்குறையால் கவச உடையை சொந்த செலவில் ரூபாய் 900 முதல் ஆயிரம் வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு கவச உடைகள் உடனுக்குடன் கிடைக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

உறவுகள் கைவிடும் சூழலில், உயிரை பற்றி கவலைப்படாமல் உதவிக்கரம் நீட்டிவரும் தமுமுகவினரின் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com