கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்த்த செவிலியர்கள்.. பறிபோன பச்சிளம் குழந்தை உயிர்..! அம்பலமான உண்மை?

வந்தவாசியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் பவானி
உயிரிழந்த குழந்தையின் தாய் பவானி file image
Published on

வந்தவாசி அருகே உள்ள தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் கர்ப்பிணிக்குச் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்குப் பிறகு இறந்ததால் ’மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் தான் குழந்தை இறந்தது’ என்று உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள தெள்ளார் புதிய காலணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் பிரசவத்திற்காகப் பவானி நேற்று தெள்ளார் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் பவானிக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் பவானி
கோவை: லாரியை முந்த முயன்ற போது விபரீதம்! டயரில் சிக்கி பைக்கில் வந்த இளைஞர் பலி!
மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

இதனைத்தொடர்ந்து இன்று காலை பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை1மணி நேரம் வரை நன்றாக இருந்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நிலை மாற்றம் ஏற்பட்டு எந்த ஒரு அசைவு இல்லாமல் கிடந்துள்ளது. மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் நீண்ட நேரம் குழந்தையை மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு வெளியில், வந்த செவிலியர்கள் குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் பவானி
‘அக்னிபத் திட்டம்’ - வன்முறை களமான ஆர்ப்பாட்டம்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இதனையடுத்து ஆத்திரமடைந்த பவானியின் உறவினர்கள் குழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் மருத்துவர்கள் இல்லாதது தான் எனவும், கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா மற்றும் தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்,.

குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் இறந்து போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com