திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை கோயில் கருவறை முன் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, திருவண்ணாமலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபத்தன்று 3ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பாதுகாப்பு பணியில் 5ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.