திருப்பூரில் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி சாக்கடைக்குள் சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டம் நடத்தினார்.
திருப்பூர் மாநகராட்சியில் 800 நிரந்தர பணியாளர்களும், 750 ஒப்பந்த பணியாளர்களும் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், கைகளால் கழிவுகளை சுத்தம் செய்யும் நிலை இருப்பதாகவும புகார் கூறி, பழனிகுமார் என்பவர் சாக்கடைக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார். நீண்ட நேரம் சாக்கடைக்குள் இருந்ததால் மயங்கி விழுந்த அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், பணிகள் முறையாகக் கண்காணிக்கப்படும் என உறுதியளித்தனர்.