திருப்பூரில் சீல் வைக்கப்பட்ட சாய சலவைப்பட்டறைகள் மீண்டும் திறக்கப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாயப்பட்டறைகள் தங்களது கழிவு நீரை நொய்யல் ஆற்றில் கலப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரில் 23 சாய சலவைப்பட்டறைகளுக்கு, கடந்த 13 ஆம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். சாயப்பட்டறையில் குழாய் உடைந்ததால் ஆற்றில் தவறுதலாக சாயக்கழிவு நீர் கலந்ததாகவும் இனிமேல் இது போல் நடக்காது என நிர்வாகங்கள் உறுதியளித்ததை அடுத்து,சாய சலவைபட்டறைகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆறு விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.