அணையில் இருந்து மீட்கப்பட்ட ப.சிதம்பரம் உறவினரின் சடலம் !

அணையில் இருந்து மீட்கப்பட்ட ப.சிதம்பரம் உறவினரின் சடலம் !
அணையில் இருந்து மீட்கப்பட்ட ப.சிதம்பரம் உறவினரின் சடலம் !
Published on

கடத்திக் கொலை செய்யப்பட்ட திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தியின் உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மீட்கப்பட்டது.

திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வந்தவர் சிவமூர்த்தி. முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரத்தின் உறவினர். கடந்த 25-ம் தேதி முதல் இவரை காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது.

அதனருகே 3 பேர் இருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் இரவில் தனியாக கார் ஒன்று நிற்பதை கண்டு அதனருகே சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் சொகுசு கார் அருகே நின்ற 3 பேர் தப்பியோடியதாக தெரிகிறது. அவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்பதும், சிவமூர்த்தி என்பவரைக் கொலை செய்து அவரது உடலுடன் 2 நாட்கள் காரில் சுற்றியதும் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர்.

தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுடன் சிவமூர்த்திக்கு தொடர்பு இருந்ததால், அந்தப் பெண்ணின் கணவரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிவமூர்த்தி உடலை எங்கு போடுவது என்று தெரியாமல் அவரது உடலுடன் 2 நாட்கள் சுற்றிய 3 பேரும், இறுதியாக ஓசூர் ஏரியில் சடலத்தை வீசி விட்டதாக காவல்துறையினர் கூறினர். இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 3 பேரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். சிவமூர்த்தியின் உடலை வீசிய இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அவர்கள் காட்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிவமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. சிவமூர்த்தியின் முகம் முழுவதும் டேப் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடலுடன் மைல்கல் ஒன்றை கட்டி அணையில் வீசியுள்ளனர். மீட்கப்பட்ட சிவமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com