திருப்பூர்: இரவு நேரத்தில் கூரை மேல் விழும் கற்கள் - அச்சத்தில் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்!

திருப்பூர் அருகே வீடுகள் மீது விழும் கற்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மின் விளக்குகள், டிரோன் கேமரா மற்றும் கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
Villagers
Villagerspt desk
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஒட்டபாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கற்கள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருகில் இருக்கும் கருப்பராயன் கோவிலில் தஞ்சமடைந்தனர். பொதுமக்களின் அச்சம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Crane
Cranept desk

இந்நிலையில், அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மின் விளக்குகள் அமைத்து கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் கேமரா மூலமாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

Villagers
செங்கல்பட்டு| பள்ளி அருகே குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்! நடந்தது இதுதான்!

பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கற்கள் வீசும் நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் அளித்தார். மேலும், அப்பகுதி மக்கல் தெரிவிக்கையில் தூக்கமினறி தவிக்கும் தங்களுக்கு விரைவில் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com