இருசக்கர‌ வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம்? வாகனத்தை ஒப்படைக்க முடிவெடுத்த உரிமையாளர்

இருசக்கர‌ வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம்? வாகனத்தை ஒப்படைக்க முடிவெடுத்த உரிமையாளர்
இருசக்கர‌ வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம்? வாகனத்தை ஒப்படைக்க முடிவெடுத்த உரிமையாளர்
Published on

திருப்பூரில் வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்‌டதால், பாதிக்கப்பட்ட நபர் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கச் செ‌ன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த நாகரா‌ஜ் என்பவர் சுயதொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட வாகன விற்பனையகத்தில், கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் தரவேண்டும் என கூறிய கடை ஊழியர்கள், கூடுதலாக பணம் தரும்படி நாகராஜனை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் நாகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது‌ தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி நாகராஜுக்கும், வாகன விற்பனை‌யகத்திற்கும் சம்மன் அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com