திருப்பத்தூர்: சிதிலமடைந்த நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த ராணுவ வீரர்கள்

திருப்பத்தூர்: சிதிலமடைந்த நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த ராணுவ வீரர்கள்
திருப்பத்தூர்: சிதிலமடைந்த நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த ராணுவ வீரர்கள்
Published on

ஆம்பூர் அருகே சிதலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை ராணுவ வீரர்கள் புதுப்பித்து கொடுத்துள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து 'ஆம்பூர் ஜவான்ஸ் காக்கும் கரங்கள்' என்ற குழுவை அமைத்துள்ளனர். இவர்கள் பணி முடிந்து விடுமுறையில் வரும்போது ஒன்றிணைந்து பொது மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசியுடன் மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினர். அதுமட்டுமல்லாமல் மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவி தொகை வழங்கி வருகின்றனர்.


இதையடுத்து, சின்னவரிகம் பகுதியில் சிதிலமடைந்த காணப்பட்ட நிழற்குடையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதேபோல் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு செல்லகூடிய சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை புதுப்பித்தனர்.


அதேபோல பயணிக்கும் பெண் பயணிகளுக்காக பெண்கள் கழிப்பறை ஒன்றும் கட்டியுள்ளனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக பயணிகள் நிழற்குடை மற்றும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்து உள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com