உடல் எடை அதிகரிப்பு... பொள்ளாச்சி சரணாலயம் செல்லும் திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை!

திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையின் உடல் எடை அதிகரித்ததால், புத்துணர்ச்சிகாக 6 மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள சரணாலயத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோயில் யானை தெய்வானை
கோயில் யானை தெய்வானைPT
Published on

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயதான ஒரு பெண் யானை வாங்கப்பட்டது. அந்த யானைக்கு தெய்வானை என்று பெயர் சூட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.

திருப்பரங்குன்றம் கோயில்
திருப்பரங்குன்றம் கோயில்PT

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக யானை தெய்வானை தன் பாகனை தாக்கி கொடூரமாகக் கொன்றது. இதனால் திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உள்ள புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, சில மாதங்கள் அங்கு தங்கி இருந்தது.

பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறிது நாட்கள் தங்க வைக்கப்பட்டது. இதற்கிடையே மறுபடியும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தெய்வானை வரவழைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

கோயில் யானை தெய்வானை
கோயில் யானை தெய்வானைPT

திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட ஒரு சில நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பங்கேற்று வந்தது யானை. அப்போது மீண்டும் திருக்கோயில் பேஸ்கார் புகழேந்தி என்பவரை தாக்கியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் யானை தெய்வானைக்கும், புதிய பாகனுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவும், தெய்வானை வயதுக்கு மீறிய எடையில் உள்ளதால் அதற்கான பயிற்சி மற்றும் புத்துணர்வுக்காகவும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பிற்கு வனத்துறை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோயில் யானை தெய்வானை
கோயில் யானை தெய்வானைPT

ஆறு மாதம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் தங்கி பயிற்சி மற்றும் புத்துணர்வு பெற்றுவிட்டு யானை மீண்டும் கோயிலுக்கு திரும்பும் என்று திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com