“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு

“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு
“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு
Published on

திருச்செந்தூர் சுற்றுப் பகுதியில், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேரிடும் வாகன விபத்துக்களில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணியாததன் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், விபத்தில்லாப் பயணங்களை வலியுறுத்தியும் மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் இணைந்திருக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், ஜுன் முதல் தேதியிலிருந்து ஹெல்மட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவதில்லை என தெரிவித்துள்ளனர். இந்த புதிய நடைமுறையை அறிவிக்கும்வகையிலான காவலர்களின் வாகனப் பேரணியை தொடங்கிவைத்த தூத்துக்குடி எஸ்.பி. முரளிரம்பா, துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com