உடைந்த கத்திமுனையை முதுகில் வைத்து தையல்!

உடைந்த கத்திமுனையை முதுகில் வைத்து தையல்!
உடைந்த கத்திமுனையை முதுகில் வைத்து தையல்!
Published on

சண்டையில் கத்தி குத்து பட்ட இளைஞருக்கு, கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கத்தியின் முனைப்பகுதியை உடலில் வைத்தே தையல் போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

நெல்லிக்குப்பம் அருகே கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜானகி ராமன் என்பவர் கடந்த 14 ஆம் தேதி கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, செவிலியர்கள், ரத்தத்தை துடைத்து தையல் போட்டுள்ளனர்.

பின்னர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கத்தி முனைப்பகுதி உடைந்து உடலில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பாரதியின் முதுகில் சிக்கியிருந்த கத்திமுனையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். 

இதுகுறித்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது பாரதியின் உடலில் கத்திமுனை இருந்தது உண்மைதான் என்றும், தாக்கப்பட்ட நிலையில் அவர் வந்தபோது ரத்தப்போக்கு அதிகம் இருந்ததால் அதனை கட்டுப்படுத்த உடனே ‌தையல் போட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வசதியில்லாததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com