அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா..?

அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா..?
அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா..?
Published on

 தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல், திருச்சி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி. மலை, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலைப் பொருத்தவரை மதுரை, திருச்சி, கரூர், வேலூர் ராணிப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஆகவே 11 மணி முதல் 3 மணி வரை யாரும் வெயியே வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com