வாகனம் மோதி விபத்து: ஊரடங்கு தளர்வால் கடையை திறக்க சென்ற மூவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்து: ஊரடங்கு தளர்வால் கடையை திறக்க சென்ற மூவர் உயிரிழப்பு
வாகனம் மோதி விபத்து: ஊரடங்கு தளர்வால் கடையை திறக்க சென்ற மூவர் உயிரிழப்பு
Published on

கிருஷ்ணகிரி அருகே ஜவுளி கடை உரிமையாளர்கள் 3 பேர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கப்பல் வாடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (22) மற்றும் குப்பன் (60) சென்னசெட்டி (70) ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் பெங்களூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 40 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர்.

தற்போது ஊரடங்கில் அரசுகள் தளர்வுகள் வழங்கியுள்ளதால் சிறு தனிக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து பெங்களூரில் உள்ள ஜவுளி கடையை திறப்பதற்காக விக்னேஷ் மற்றும் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அதிகாலை 3 மணியளவில் பெங்களூர் நோக்கி புறப்பட்டனர்.

 இருசக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் செட்டிபள்ளி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கந்திகுப்பம் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com