’நம்ம சென்னை செயலியில் புகார் தெரிவித்த எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’- பெண் புகார்

’நம்ம சென்னை செயலியில் புகார் தெரிவித்த எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’- பெண் புகார்
’நம்ம சென்னை செயலியில் புகார் தெரிவித்த எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’- பெண் புகார்
Published on

சட்டத்திற்குப் புறம்பாக மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடுகின்றனர் என்று மாநகராட்சியின் ’நம்ம சென்னை’ செயலியில் புகார் தெரிவித்த தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி கழிவுநீரை மழைநீர் வடிகால் இணைப்பில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் ப்ரீத்தி ராமதாஸ் என்ற பெண் மாநகராட்சியின் ’நம்ம சென்னை’ செயலி வாயிலாக புகார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வாயிலாக புகார் தெரிவித்தற்காக மாநகராட்சியைச் சேர்ந்த 10 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தங்களை மிரட்டியதாகவும் வீட்டை புகைப்படம் எடுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்விட்டரில் இந்த மிரட்டல் தொடர்பாக பதிவிட்ட பிறகு இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பிரச்னை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக கழிவுநீர் மழைநீர் வடிகாலில் விடுவது தொடர்பாக இணைப்புகளை துண்டித்து அபராதம் விதித்து வரும் மாநகராட்சி ’நம்ம சென்னை’ செயலி மூலம் இது தொடர்பான புகார்கள் அளிக்கும் பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com