ராசிபுரம் அருகே திடீரென ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான ராட்சத வௌவால்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுமட்டுமின்றி தக்காணபீடபூமியில் அதிகளவு பாலைவன வெட்டுக்கிளிகள் வயல் வெளிகளில் படையெடுத்து வருகின்றன.இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியிலும் வெட்டுக்கிளிகள் அதிகளவில் தென்படுகின்றன.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாளிப்பட்டி பகுதியில் இருந்த புளியமரம் மற்றும் அரச மரத்தில் 1000-க்கும் மேற்பட்ட ராட்சத வௌவால்கள் ஒன்று கூடி பயங்கர சத்தத்துடன் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த வெளவால்கள் திடீரென எப்படி இங்கு வந்தது? என அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்த வௌவால்களால் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த ராட்சத வெளவால்கள்களால் கொரோனா பரவி விடுமோ என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த வெளவால்களை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.