தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தது. தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 1000க்கும் மேற்பட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை வசம் உள்ள பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் அனைத்து வாபஸ் பெறப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை கைதுசெய்யப்பட்ட 94 பேர்களில் காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு ஆணைய பரிந்துரை அடிப்படையில் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்றொரு நபர் வேறு வழக்கில் கைதாகி சிறையிலேயே இறந்துவிட்டதால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.