ஆதீன மடங்களின் சொத்துக்கள் எவ்வளவு?: உயர்நீதிமன்றம்

ஆதீன மடங்களின் சொத்துக்கள் எவ்வளவு?: உயர்நீதிமன்றம்
ஆதீன மடங்களின் சொத்துக்கள் எவ்வளவு?: உயர்நீதிமன்றம்
Published on

அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சைவ சித்தாந்தத்தை வளர்க்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே சைவ சமய மடங்கள் அல்லது சைவ ஆதீனம் என்பவை ஆகும். இதில் தருமபுர ஆதீன பரம்பரை, திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை. 

தூத்துக்குடி செங்கோல் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அதனை அளவீடு செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆதீனங்களில் இதுபோன்ற நிலைதான் உள்ளது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்து அறநிலையத் இணை ஆணையரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரண் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆதீன மடங்களின் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை கடைசியாக எப்போது தணிக்கை செய்தது என்று கேள்வி எழுப்பினர். சொத்து ஆவணங்களை பதிவுத்துறை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். வழக்கு விசாரணை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com