தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரணயன், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மதுரை மற்றும் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளே பெரும்பாலான வழக்குகளில் பிரதானமாக இருப்பதால் வழக்குகளை சென்னைக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கையை திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com