தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை
Published on

ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியது.

கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தற்போது 6வது கட்டமாக விசாரணை நடத்தி வருகிறது. போராட்டக்காரர்கள், உயிரிழந்தவரின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 3 நாட்களில் 21 பேர் ஆணையத்தில் ஆஜராகினர்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை அதிகாரி ஏற்கெனவே 5 கட்டமாக விசாரணை நடத்தினார். அப்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்பட மொத்தம் 87 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 6வது கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் விசாரணை நடந்தது. அப்போது ஜெயிலில் இருந்த வந்த போது, கலவர தாக்குதலில் இறந்ததாக கூறப்பட்ட தாளமுத்துநகரை சேர்ந்த பாரத்ராஜா என்பவரின் உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் போராட்டக்காரர்களிடம் விசாரணை நடந்தது. 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 10 பேர் ஆஜராக வாக்குமூலம் அளித்தனர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 21 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com