விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது, இதில் பெரியமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன,
பெரிய மாட்டு வண்டி வைப்பார் கிராமத்திலிருந்து புளியங்குளம் கிராமம் வரையிலும், சின்ன மாட்டு வண்டி, வைப்பார் கிராமத்திலிருந்து குளத்தூர் வரையும் எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன, பெரிய மாட்டு வண்டியில் 16 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு 18 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.
இந்த போட்டிகளை தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். இதில் 16 கிலோ மீட்டர் தூரம் நடைபற்ற பெரிய மாட்டு வண்டி பேட்டியில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்;ந்த மோகன்சாமி குமார் என்பவரது மாட்டு வண்டி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை தூத்துக்குடி சண்முகபுரம் மெடிக்கல் மாட்டு வண்டியும், 3வது இடத்தை கடம்பூர் இளைய ஜமீன்தார் மாட்டு வண்டியும் பிடித்தன.
இதையெடுத்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற பூஞ்சிட்டு போட்டியில் தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல் மாட்டு வண்டி முதலிடத்தையும், 2வது இடத்தை நெல்லை சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டியும், 3வது இடத்தை கடம்பூர் கருணாகர ராஜா மாட்டு வண்டியும் பிடித்தன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.